Wednesday, 27 November 2013

BINARY SIGNALS



                                       

               இயற்கையிலே எல்லாவற்றிற்க்கும் பொதுவாக இரு குணங்கள் உண்டு உதாரணமாக மேடு-பள்ளம், மேலே-கீழே, உயர்வு-தாழ்வு, நன்மை-தீமை, உண்டு-இல்லை. இவற்றை போல கணிணியிலும் இரு நிலைகள் உண்டு, ON & OFF.

 The computer generally have two states on & off.

             
                மிக எளிமையாக Binary Signals பற்றி தெரிந்து கொள்ள  உதாரணமாக ஒரு கதை.

பழங்காலத்தில் ஒரு குட்டி நாடு இருந்தது அதன் மன்னன் அந்த நாட்டின் படைகளை நாட்டிற்கு வெளியே உள்ள ஓர் மலையில் வைத்திருந்தான். போரின் சமயம் மட்டும் படை வெளியே வரும் மற்ற நேரம் எல்லாம் மலையில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும்.

                 ஒரு நாள் எதிரி நாட்டு மன்னன் யாருமறியாதவாறு படை எடுத்துக் கொண்டு நாட்டை சுற்றி வளைத்து விட்டான். வெளியில் தூது செல்லும் புறாவையையும் அம்பு எய்து கொன்றனர்.

    உள்ளேயும் இருக்க முடியாது, வெளியேயும் செல்ல முடியாத நிலையில் நாடு படைக்கு தகவல் தர வேண்டிய கட்டாயம்.

                அந்நிலையில் ஓர் புத்திசாலி இளைஞன் ஒருவன் அரண்மனையின் மேல் மாடி உச்சிக்குச்சென்று அங்கே விறகிட்டு தீ வளர்த்தான். எரிந்த தீ சீராக எரியவில்லை ஒரு சமயம் உயரமாகவும், மற்றொரு சமயம் தாழ்வாகவும் எரிந்தது. தொலைவில் இருந்த படை வீரர்கள் அதனைக் கண்டு ஏதோ அபாயம் என உணர்ந்து நாட்டிற்கு படையுடன் வந்து நாட்டை போரிட்டு மீட்டனர்.

                இந்த கதையில் படைகளுக்கும், நாட்டிற்கும் இடையே தொடர்பினை உருவாக்கியது " தீ ", அது தான் அங்கே signal ஆக பயன்பட்டது.

                Here We are going to study about Signals of the  computer.

Computer-ல் signal 0's & 1's ஆகதான் இருக்கும். ஏன் 1,2 என signal வைக்க முடியாதா? என்றால் ஆம் முடியாது. ஏன் என்றால் computer முழுக்க மின்சாரத்தால் இயங்கக் கூடியது. இந்த மின்சார மாறுதல் (ON & OFF) குறிப்பிட்ட தகவலை கணிணியின் Input ஆக (அல்லது)  Output ஆக இருக்க உதவுகிறது.

உதாரணத்திற்கு ஆங்கில எழுத்தான 'A' என்பதை computer- க்கு Input ஆக keyboard-ல் இருந்து வழங்கும் போது அது புரிந்து கொள்ளும் முறை (FORMAT) 01101101. அதே போல் கணிணி-Output Device (Monitor)க்கு அனுப்பும் போது Binary டோ Character ஆக display செய்கிறது.

இந்த conversion க்கு நிறைய Programs & Logic தேவைப்படும் அதைப்பற்றி பின்னாளில் ஒரு பதிவில் பார்ப்போம்.


பதிவினைப் பற்றிய கருத்துக்களை (Comments) தெரிவிக்கவும்.

#ggiitinfo

Monday, 25 November 2013

An introduction to Class

பதிவு உலக நண்பர்களுக்கு,

கணினி மற்றும் அதன் பயன்பாட்டை பற்றிய ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று நெடுநாள் ஆசை.. ஆனால் அதற்குரிய காலநேரம் இல்லாததால் என்ன செய்யலாம் என யோசனை செய்ததில் இறைவன் காட்டிய ஒரு வழி இந்த blog writing...

Computer & Programming Language பற்றி நிறைய புத்தகங்கள் வந்து இருந்தாலும், அவைகள் எல்லாம் ஏட்டு சுரைக்காய் போல் தான் உள்ளது.. கல்லுரியில் சொல்லிதரும் syllabus,  Degree வாங்க மட்டும் தான் உள்ளது.. நம்ம ஊரு ஆசாமிகளும், வெளிநாட்டு ஆசாமிகளும் எழுதிய நூல்களும் concept புரிந்து கொள்ள கஷ்டமாக உள்ளது..

 There is a huge gap between College & Corporate.


இந்த பதிவை ஒரு வகுப்பறையாக மாற்றி மாணவர்களுக்கும், கணினி பற்றி ஆர்வம் உள்ள அனைவர்க்கும் பாடங்கள் நடத்தப்பட உள்ளது. 

இருக்கும் வேலைப்பளுவில் (Software Engineer) இதை தொடர்ந்து நடத்த எல்லாம் வல்ல இறைவனும், எனது குருமார்களும் அருள் புரிய வேண்டும்..

#ggiitinfo