Saturday 5 July 2014

சில கேள்விகளும் அதன் விளக்கங்களும் :



கேள்வி: கணினி ஏன் மிக அதிக அளவிலான புகழையும் , உபயோகத்தையும் கொண்டுள்ளது ? ( Why Computer Was So Popular and Why all Departments are accepting Computers..?)
விளக்கம்:
     1.கணினி என்பது தனிப்பட்ட துறை அல்ல. இயற்பியல் தனிப்பட்ட துறை , கணிதம் தனிப்பட்ட துறை ..இந்த இரண்டும் இணைந்து கணினி துறை ஆனது ..




2.தினசரி வாழ்க்கையில் அனைத்து பகுதியிலும் (day to day) கணிதம் உள்ளது .. வீட்டிலிருந்து கல்லூரிக்கு நடந்து சென்றால் எவ்வளவு நேரம், பேருந்தில் (Bus)  சென்றால் எவ்வளவு நேரம்  என வரையறை கணிதத்தின் படி உள்ளது ..
     3.அதே போல் வேதியியல் (Chemistry) துறையிலும் கணித வரையறைகள் (Mathematical Equation) உள்ளது .. குறிப்பிட்ட விகிதத்தில் சேரும் இரு தனிமங்களின் மூலக்கூறுகள் ( H2 + O) இணைந்து புது வித கலவையினை (Compounds) உருவாக்குகின்றன .. இங்கே விகிதம் (Ratio) என்பது கணிதம் ..
     4.Accounts துறையிலும் ( incomes and expenses ) வரவையும் , செலவையும் ( Credits and Debits ) கடனையும் , பற்றையும் சரியாக பராமரிக்க கணித அடிப்படை தான் உபயோகமாகிறது ..
     5. கணினியில் கணிதம் சரி பகுதியாக உள்ளது .. கணித அடிப்படையில் தான் ( Software ) உருவாக்கபடுகிறது ( Software is a collection of program solved one's problem based on logic ). இங்கே ( Logic ) என்பது கணித அடிப்படை .. கணினியும் அடிப்படையில் ( 0, 1 ) கணித முறையில் தான் இயங்குகிறது ..
     ஆகவே கணிதம் இருக்கும் இடம் அனைத்தையும் கணிப்பொறி நிரப்பியது ..

 #ggiitinfo


Tuesday 24 June 2014

Firewall

     கணினியின் வளர்ச்சி நிலை ஒருவரை மட்டும் சார்ந்து (Dependent) அமையவில்லை. இதற்குள் பிரம்மாண்டமான பல உள் பிரிவுகள் (Departments) உள்ளது. பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளின் மூலமாக தான் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆராய்ச்சி நிலையும் (Research) ஒருவரையோ அல்லது ஒரு பகுதி மக்களையோ மட்டும் சார்ந்து அமையவில்லை.
     மனிதன்  இயற்கையின் தயவுடன் வாழ கற்றுக்கொண்டான் . மனித சமுதாயத்தின்(protocols) ஒழுங்கான மற்றும் உபயோகமான விதிகளை ஆராய்ந்து தான் கணினியின் பல பகுதிகள் வடிவமைக்க பட்டுள்ளன .. (It is developed based on human life protocol model) உதாரணமாக நிரந்தர சேமிப்பு பகுதி ( Hard Disk) மனித மூளையின் அடிப்படையினை கொண்டே இயங்குகிறது .. எவ்வாறு ஒரு மனிதனால் தான் கற்று கொண்ட விஷயங்களை சொல்ல முடிகிறதோ, புதியதாக விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறதோ அவ்வாறே Hard-Disk-இன் வேலையும் நடைபெறுகிறது ( Write Data inside Memory & Read Data inside Memory What it had written.)
Fire wall (தீச்சுவர்) :
              பழங்கால அரசர்கள் தத்தம் பாதுகாப்பிற்காக (Security) அதனை சுற்றி அகாலியினை அமைத்தனர் . கோட்டையின் வாயிலை பெரிதாக கட்டினர் . இப்போதும் மதுரை அழகர் கோவிலினுள் அக்கோட்டையின் சுவரின் சிதிலமடைந்த பகுதியினை நாம் காணலம் .
                அச்சுவற்றினுள் 'பொறி' இயந்திரங்களையும், கோட்டை பாதுகாவலர்களையும் நியமித்தனர் .(They allocated Automated Destroy Machines & Security Guards inside the Wall).இந்த பொறி இயந்திரங்கள் வகைகளாக வைக்கப்பட்டன. வில் பொறி, கல் ஏறியும் பொறி , நெருப்பை காக்கும் பொறி , கொதிக்கும் எண்ணெய் கொட்டும் பொறி என இதனை அமைத்த பெருமை தொல்தமிழர்களையே சாரும். வரலாற்றினை ஆய்வு செய்த பன்னாட்டு நிறுவனங்கள் அதனை ( MNC- Multi National Companies) தங்களுக்கு ஏற்றவாறு அதனை வடிவமைத்து கொண்டனர், (In the companies customized this technique based on their requirements and make their rules based on their operating system’s).
    எதிரிகள் தாக்க வரும் போது பாதுகாத்து கொள்ளவும், ஒற்றர்கள் ,பகைவர்கள் , சந்தேகத்திற்க்கு உரியவர்கள் அனைவரையும் சோதனை செய்து உள்ளே அனுமதிக்கவும் முதலிய வேலைகள் இதன் வாயிலாக நடைபெற்றன . அதே போல் கணினியில் உள்ள Firewall சோதனைகளை மேற்கொள்கிறது.( It checks Restricted Incomes Based on the Rules). தடைகளை மீறி உள்ளே வருபவர்களுக்கு தண்டனை விதிப்பதை போல ( கணினி மீறி வரும் Program or Packet களை அழித்து விடுகிறது) கணினியும்செயல்படுகிறது.(It destroys the packets based on packet Filters Rule). இது போல் இன்னும் பல தகவல்கள் தொடரும்.

#ggiitinfo

Wednesday 27 November 2013

BINARY SIGNALS



                                       

               இயற்கையிலே எல்லாவற்றிற்க்கும் பொதுவாக இரு குணங்கள் உண்டு உதாரணமாக மேடு-பள்ளம், மேலே-கீழே, உயர்வு-தாழ்வு, நன்மை-தீமை, உண்டு-இல்லை. இவற்றை போல கணிணியிலும் இரு நிலைகள் உண்டு, ON & OFF.

 The computer generally have two states on & off.

             
                மிக எளிமையாக Binary Signals பற்றி தெரிந்து கொள்ள  உதாரணமாக ஒரு கதை.

பழங்காலத்தில் ஒரு குட்டி நாடு இருந்தது அதன் மன்னன் அந்த நாட்டின் படைகளை நாட்டிற்கு வெளியே உள்ள ஓர் மலையில் வைத்திருந்தான். போரின் சமயம் மட்டும் படை வெளியே வரும் மற்ற நேரம் எல்லாம் மலையில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும்.

                 ஒரு நாள் எதிரி நாட்டு மன்னன் யாருமறியாதவாறு படை எடுத்துக் கொண்டு நாட்டை சுற்றி வளைத்து விட்டான். வெளியில் தூது செல்லும் புறாவையையும் அம்பு எய்து கொன்றனர்.

    உள்ளேயும் இருக்க முடியாது, வெளியேயும் செல்ல முடியாத நிலையில் நாடு படைக்கு தகவல் தர வேண்டிய கட்டாயம்.

                அந்நிலையில் ஓர் புத்திசாலி இளைஞன் ஒருவன் அரண்மனையின் மேல் மாடி உச்சிக்குச்சென்று அங்கே விறகிட்டு தீ வளர்த்தான். எரிந்த தீ சீராக எரியவில்லை ஒரு சமயம் உயரமாகவும், மற்றொரு சமயம் தாழ்வாகவும் எரிந்தது. தொலைவில் இருந்த படை வீரர்கள் அதனைக் கண்டு ஏதோ அபாயம் என உணர்ந்து நாட்டிற்கு படையுடன் வந்து நாட்டை போரிட்டு மீட்டனர்.

                இந்த கதையில் படைகளுக்கும், நாட்டிற்கும் இடையே தொடர்பினை உருவாக்கியது " தீ ", அது தான் அங்கே signal ஆக பயன்பட்டது.

                Here We are going to study about Signals of the  computer.

Computer-ல் signal 0's & 1's ஆகதான் இருக்கும். ஏன் 1,2 என signal வைக்க முடியாதா? என்றால் ஆம் முடியாது. ஏன் என்றால் computer முழுக்க மின்சாரத்தால் இயங்கக் கூடியது. இந்த மின்சார மாறுதல் (ON & OFF) குறிப்பிட்ட தகவலை கணிணியின் Input ஆக (அல்லது)  Output ஆக இருக்க உதவுகிறது.

உதாரணத்திற்கு ஆங்கில எழுத்தான 'A' என்பதை computer- க்கு Input ஆக keyboard-ல் இருந்து வழங்கும் போது அது புரிந்து கொள்ளும் முறை (FORMAT) 01101101. அதே போல் கணிணி-Output Device (Monitor)க்கு அனுப்பும் போது Binary டோ Character ஆக display செய்கிறது.

இந்த conversion க்கு நிறைய Programs & Logic தேவைப்படும் அதைப்பற்றி பின்னாளில் ஒரு பதிவில் பார்ப்போம்.


பதிவினைப் பற்றிய கருத்துக்களை (Comments) தெரிவிக்கவும்.

#ggiitinfo

Monday 25 November 2013

An introduction to Class

பதிவு உலக நண்பர்களுக்கு,

கணினி மற்றும் அதன் பயன்பாட்டை பற்றிய ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று நெடுநாள் ஆசை.. ஆனால் அதற்குரிய காலநேரம் இல்லாததால் என்ன செய்யலாம் என யோசனை செய்ததில் இறைவன் காட்டிய ஒரு வழி இந்த blog writing...

Computer & Programming Language பற்றி நிறைய புத்தகங்கள் வந்து இருந்தாலும், அவைகள் எல்லாம் ஏட்டு சுரைக்காய் போல் தான் உள்ளது.. கல்லுரியில் சொல்லிதரும் syllabus,  Degree வாங்க மட்டும் தான் உள்ளது.. நம்ம ஊரு ஆசாமிகளும், வெளிநாட்டு ஆசாமிகளும் எழுதிய நூல்களும் concept புரிந்து கொள்ள கஷ்டமாக உள்ளது..

 There is a huge gap between College & Corporate.


இந்த பதிவை ஒரு வகுப்பறையாக மாற்றி மாணவர்களுக்கும், கணினி பற்றி ஆர்வம் உள்ள அனைவர்க்கும் பாடங்கள் நடத்தப்பட உள்ளது. 

இருக்கும் வேலைப்பளுவில் (Software Engineer) இதை தொடர்ந்து நடத்த எல்லாம் வல்ல இறைவனும், எனது குருமார்களும் அருள் புரிய வேண்டும்..

#ggiitinfo